Tuesday, March 16, 2010

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

4.வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
பாரத வந்தே மாதரம்! ஜெய பாரத வந்தே மாதரம்!

தாயின் தாளில் வாழ்வாம் மலரால்
அர்ச்சனை செய்ய விரைகின்றோம்
தளர்ந்திட மாட்டோம் பெரும்புயல் வரினும்
வழிபட விரைந்து செல்கின்றோம் (வந்தே)

இமய பர்வதம் சிரசாகிடவே
எத்தனை உய்ந்த நெற்றியடா!
இணையடி தன்னை கடல் கழுவிட
எத்தனை அழகிய தேசமடா!
பச்சைப் பசுமை ஆடையணிந்தாள்
இறைவி தன்னைப் பாடுகிறோம்! (வந்தே)


வான்புகழ் கங்கை கழுத்தினிலே மாலை
எத்தனை மாலைகள் நதியாலே
விந்திய மாலையும் சாத்புராவம்
ஒட்டயானமாய் அணி செய்ய
வஜ்ரக் கரமாய் ஸஹ்யாத்ரி மலை
வீர பாக்கியம் விளக்கிடுது (வந்தே)

எவரெதி ரேயும் தலைகுனியாத
தன்மானத்தின் வடிவமடா!
எங்கள் தாயைத் தாக்கிய படைகள்
மண்ணுடன் மண்ணாய் மறைந்ததடா!
எதிரியை வென்று வாகை சூடினால்

ஏற்புடைய அன்னை வாழியவே! (வந்தே)

இந்தப் புண்ணிய நாடெங்கள் நாடு

3.இந்தப் புண்ணிய நாடெங்கள் நாடு
இந்தப் பாரதப் பழம்பெரும் நாடு
இதன் பெருமையை உலகில் உயர்த்த
இணையில்லாத் தியாகம் செய்வோம்

இது ரிஷி முனிவோர்தம் நாடு
ஆன்மீகச் செல்வர் தம்நாடு
இறைபணியில் அனைத்து மளித்தே
இன்பத்தில் திளைத்த நாடு
இறைவன் வடிவம் இந்நாடு
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)

இது வீரர் தோன்றிய நாடு
வில் விஜயன் வீமன் நாடு
வீரத்தின் நற்பயிர் தழைக்க
செங்குருதியைப் பாய்ச்சிய நாடு
வீரத்தின் மரபினை காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)

இது ஒருமை நிறைந்த நாடு
ஓருடலாய் அமைந்த நாடு
இது தோன்றிய நாள் முதல் ஒன்றி
பெரும் குடும்பமாகும் நாடு
இந்த நாட்டின் ஒருமையைக் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா) தாய் தந்தை குரு இந்நாடு
தாய்பாசம் நிறைந்ததோர் நாடு
தாய் நாட்டின் வளத்தினை உயர்த்த
தம் வாழ்வையளித்ததோர் நாடு
தாய் நாட்டுப் பற்றினை வளர்க்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
போகத்தின் பெரும் புயலுடனே
பிற நாட்டின் கருத்து அலையும்
சுயநலமும் பிளவும் இதனை
சுய மறதியிலாழ்த்திடும் இன்று
சுயநினைவும் வலிமையும் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
இதன் அகமும் புறமும் எதிரி
இதன் சுதந்திரம் பறிக்கும் வைரி
இந்த நாட்டினை அடிமை ஆக்க
சதிகள் பல செய்யும் துரோகி
இந்த நாட்டின் விடுதலை காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)

பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே!

2.பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே!
பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே!

பலப்பல கோடி மக்கள் நெஞ்சிலும் அன்பு நீயே
பலப்பல கோடி மக்கள் நாவிலும் பெருமை நீயே
பைம்புனல் அமுதம் தோய்ந்த பண்பு நீ பரிவு நீயே
பாரதத்தாயே உந்தன் பதமலர் மறக்கிலோமே
(பாரத)
கரும்பு நீ செந்நெல் நீயே! கதலி நீ தென்னை நீயே!
காடு நீ மேடு நீயே! கமல நற் பொய்கை நீயே!
இரும்பு நீ பொன்னும் நீயே! எறிகடல் முத்தும் நீயே!
இனிய எம்தாயே உந்தன் இணையடி மறக்கிலோமே
(பாரத)
இமயமாமலையில் உந்தன் இணையிலா உயர்வு கண்டோம்
இறங்கிய கங்கை தோறும் அழிவிலா வளமை கண்டோம்
குமரிமாமுனையில் எல்லைக் கோடிலாக் கருணை கண்டோம்
கோமளச் செல்வி உந்தன் திருவடி மறக்கிலோமே! (பாரத)
கயிலை நீ மதுரை நீயே! காசி நீ காஞ்சி நீயே!
காவியம் கவிதை சிற்பக் காட்சியும் நீயே தாயே!
தயவும் நீ தருமமும் நீயே! சாந்தியின் வடிவம் நீயே!
சத்திய நெறியே செல்லும் தாளினை மறக்கிலோமே!
(பாரத)

எம் ஜென்மபூமி தாயே!

1.எம் ஜென்மபூமி தாயே!
எம் கர்மபூமி நீயே
எம் புண்யபூமி தாயே!
குலதெய்வமென்றும் நீயே

வாழ்வாம் மலர்தனை உன்
திருவடிதனில் படைத்தோம்
ஏழேழு பிறவிதோறும்
உனையே வணங்கி வாழ்வோம்
உனதேவல் செய்துயர்வோம்
(எம் ஜென்மபூமி)

உணவாகி நீருமாகி
உடலத்துடன் கலந்தாய்
ஊனாகி உதிரமாகி
எம்மில் நிறைந்து நின்றாய்
உனக்காகவே எம்வாழ்வு
உனக்காகச் சாவுமேற்போம்
உனக்காகத் தொண்டுசெய்தே
வளமோங்கும் நிலை சமைப்போம்
(உனதேவல்)
ஒப்பற்ற இமயமுந்தன்
ஒளிவீசும் மகுடமாகும்
முப்புறமும் சூழும் கடல்கள்
ஓயாது மணிகள் தூவும்
இணையற்ற நாடெம் நாடு
என்றே முழக்கம் செய்வோம்
கணமேனும் உனை மறந்தே
உயிர் வாழச் சகியமாட்டோம்
(உனதேவல்)
நீ காத்த நெறிமுறைகள்
காலத்தை வென்ற அமுதம்
நீ உறையும் ஆலயங்கள்
தர்மத்தின் மையமாகும்
பண்பின் பாதகை யேந்தி
புவியெங்கும் விஜயம் செய்வோம்
பண்பாட்டின் தென்றலாகி
உள்ளங்கள் குளிரவைப்போம்
(உனதேவல்)
தாய்ப்பாச மேங்க வைப்போம்
தனயர்களிணைய வைப்போம்
தாய்நாடு யர்த்தும் உணர்வை
நெஞ்சங்கள் தோறும் வளர்ப்போம்
கைம்மாறு கருதிடாமல்
கடமைகளாற்ற வந்தோம்
கணமேனும் துஞ்சிடாமல்
பயணம் தொடர்ந்து செல்வோம்
(உனதேவல்)

சமர்ப்பணம்

அழகிய வண்ண மலர்கள் விதவிதமாய் பூத்துக்குழுங்கும் நந்தவனம். பக்தன் மலர்களை பறித்துத் தொடக்கிறான். பூ மாலை உருவாகிறது. பக்தியோடு அதை இறைவன் திருவடியில் சமர்ப்பிக்கிறான்.
அதே போன்று பாரத நாட்டின், பாரத மக்களின் அந்நாள்இந்நாள் நிலை கண்டு பெருமிதத்தில் விம்மிய, கசிந்து உருகிய எண்ணற்ற உள்ளங்களிலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சி விதவிதமான பாடல்களாக மலர்ந்திருக்கிறது. அவற்றையெல்லாம் தொடுத்து பாமாலை ஆக்கியிருக்கிறோம்.
பக்தியுடன் "பாமாலை'யை பாரத அன்னையின் பாதங்களில்
சமர்ப்பிக்கிறோம் அன்னையின் மைந்தர்கள், பாமாலையின் அருமை பெருமை உணர்ந்து, பாரத அன்னையின் பணியில் இணைகிறார்கள்.
இந்தப் "பாமாலை'யை பாரதமாத பரிவுடன் ஏற்று அருள் தருகிறாள் என்பதற்கு இதுவே அடையாளம்.
வெல்க பாரத அன்னை.