Tuesday, March 16, 2010

பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே!

2.பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே!
பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே!

பலப்பல கோடி மக்கள் நெஞ்சிலும் அன்பு நீயே
பலப்பல கோடி மக்கள் நாவிலும் பெருமை நீயே
பைம்புனல் அமுதம் தோய்ந்த பண்பு நீ பரிவு நீயே
பாரதத்தாயே உந்தன் பதமலர் மறக்கிலோமே
(பாரத)
கரும்பு நீ செந்நெல் நீயே! கதலி நீ தென்னை நீயே!
காடு நீ மேடு நீயே! கமல நற் பொய்கை நீயே!
இரும்பு நீ பொன்னும் நீயே! எறிகடல் முத்தும் நீயே!
இனிய எம்தாயே உந்தன் இணையடி மறக்கிலோமே
(பாரத)
இமயமாமலையில் உந்தன் இணையிலா உயர்வு கண்டோம்
இறங்கிய கங்கை தோறும் அழிவிலா வளமை கண்டோம்
குமரிமாமுனையில் எல்லைக் கோடிலாக் கருணை கண்டோம்
கோமளச் செல்வி உந்தன் திருவடி மறக்கிலோமே! (பாரத)
கயிலை நீ மதுரை நீயே! காசி நீ காஞ்சி நீயே!
காவியம் கவிதை சிற்பக் காட்சியும் நீயே தாயே!
தயவும் நீ தருமமும் நீயே! சாந்தியின் வடிவம் நீயே!
சத்திய நெறியே செல்லும் தாளினை மறக்கிலோமே!
(பாரத)

No comments:

Post a Comment