Tuesday, March 16, 2010

சமர்ப்பணம்

அழகிய வண்ண மலர்கள் விதவிதமாய் பூத்துக்குழுங்கும் நந்தவனம். பக்தன் மலர்களை பறித்துத் தொடக்கிறான். பூ மாலை உருவாகிறது. பக்தியோடு அதை இறைவன் திருவடியில் சமர்ப்பிக்கிறான்.
அதே போன்று பாரத நாட்டின், பாரத மக்களின் அந்நாள்இந்நாள் நிலை கண்டு பெருமிதத்தில் விம்மிய, கசிந்து உருகிய எண்ணற்ற உள்ளங்களிலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சி விதவிதமான பாடல்களாக மலர்ந்திருக்கிறது. அவற்றையெல்லாம் தொடுத்து பாமாலை ஆக்கியிருக்கிறோம்.
பக்தியுடன் "பாமாலை'யை பாரத அன்னையின் பாதங்களில்
சமர்ப்பிக்கிறோம் அன்னையின் மைந்தர்கள், பாமாலையின் அருமை பெருமை உணர்ந்து, பாரத அன்னையின் பணியில் இணைகிறார்கள்.
இந்தப் "பாமாலை'யை பாரதமாத பரிவுடன் ஏற்று அருள் தருகிறாள் என்பதற்கு இதுவே அடையாளம்.
வெல்க பாரத அன்னை.

1 comment:

  1. பாரதீச்வரி பாபநாசினி பாரதம் என்ற ஞான கோவில் காக்கும் ஈஸ்வரி
    குமரி முனை தவம் செய்யும் பகவதி நீயே
    காஷ்மீர பனிமலையை காக்கும் வைஷ்ணவி
    ஸ்ருங்க பீட சங்கரனின் சாரதாவும் நீ
    காலிகட்ட ராமகிருஷ்ணரின் பவதாரிணி நீ

    பாடல் வரிகள் கிடைக்குமா ?

    ReplyDelete