3.இந்தப் புண்ணிய நாடெங்கள் நாடு
இந்தப் பாரதப் பழம்பெரும் நாடு
இதன் பெருமையை உலகில் உயர்த்த
இணையில்லாத் தியாகம் செய்வோம்
இது ரிஷி முனிவோர்தம் நாடு
ஆன்மீகச் செல்வர் தம்நாடு
இறைபணியில் அனைத்து மளித்தே
இன்பத்தில் திளைத்த நாடு
இறைவன் வடிவம் இந்நாடு
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
இது வீரர் தோன்றிய நாடு
வில் விஜயன் வீமன் நாடு
வீரத்தின் நற்பயிர் தழைக்க
செங்குருதியைப் பாய்ச்சிய நாடு
வீரத்தின் மரபினை காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
இது ஒருமை நிறைந்த நாடு
ஓருடலாய் அமைந்த நாடு
இது தோன்றிய நாள் முதல் ஒன்றி
பெரும் குடும்பமாகும் நாடு
இந்த நாட்டின் ஒருமையைக் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா) தாய் தந்தை குரு இந்நாடு
தாய்பாசம் நிறைந்ததோர் நாடு
தாய் நாட்டின் வளத்தினை உயர்த்த
தம் வாழ்வையளித்ததோர் நாடு
தாய் நாட்டுப் பற்றினை வளர்க்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
போகத்தின் பெரும் புயலுடனே
பிற நாட்டின் கருத்து அலையும்
சுயநலமும் பிளவும் இதனை
சுய மறதியிலாழ்த்திடும் இன்று
சுயநினைவும் வலிமையும் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
இதன் அகமும் புறமும் எதிரி
இதன் சுதந்திரம் பறிக்கும் வைரி
இந்த நாட்டினை அடிமை ஆக்க
சதிகள் பல செய்யும் துரோகி
இந்த நாட்டின் விடுதலை காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம்
(இணையில்லா)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment