Tuesday, May 25, 2010

இதயத்தூறும் அன்பு அனைத்தும்

இதயத்தூறும் அன்பு அனைத்தும்
தாயின் திருவுருவில் கலந்து
இனிய பாரத தேவி ஆலயம்
புணரெழுப்ப ஆசை கொண்டோம்

உடலை வெட்டி செதுக்கி மாற்றி
கோவில் மதில்கள் எழுந்து நிற்கும்
உருவிழந்து ஆழப் புதைந்து
மண்ணின் கீழே மூடி மறையும்
வெற்றி தோல்வி புகழ்ச்சி இகழ்ச்சி
ஆசை எல்லாம் அறவே நீங்கும்
இரவு பகலாய் மௌனமாக
ஆலயத்தை சுமந்து நிற்கும்
இன்பம் வந்தால் மகிழ்வதில்லை
துன்பம் கண்டு அழுவதில்லை
ஆலயத்தின் அடித்தளக்கல்
ஆகவே நாம் ஆசை கொண்டோம்
(இதயத்துõறும்)

பரிகாசிப்போர் கேலி செய்வோர்
ஏளனத்தை சகித்த போதும்
புனித ஒளியை அளிக்க வேண்டி
அணு அணுவென உடலை எரித்து
தொன்மை மிகு வரலாறு காட்டும்
துõய ஒளியைப் பரப்ப வேண்டி
பாதை காட்டுது தெய்வ தீபம்
சாதகன் முன்னேறுகின்றான்
தீபத்தின் வைராக்யம் நம்மை
ஊக்கு வித்தே உணர்ச்சி தந்திட
காரிருளிலே சூன்யப்பாதையில்
ஒளிபரப்பிட ஆசை கொண்டோம்
(இதயத்துõறும்)

காணப்பொழுதேனும் ஓய்வு இன்றி
புயலுடனே போராட வேண்டும்
கொந்தளிக்கும் அலைகளிடையே
உறுதியுடன் முன்னேற வேண்டும்
உடைக்க வந்திடும் பேரலைகளின்
தாக்குதலையே தாங்க வேண்டும்
மெல்லவே முன்னேறிச் சென்று
லட்சியக் கரை யேற வேண்டும்
தனது உடலை தனது எனவே
கூறவே வழி இன்றிப் போகும்
ராஷ்ட்ரப்படகினை வழி நடத்தும்
கருவியாகிட ஆசை கொண்டோம்
(இதயத்துõறும்)

தேவலேகமே வியக்கும் எம்

தேவலேகமே வியக்கும் எம்
அருமை தாயகம்
ஆதியந்தமற்றதிந்த அமர பூமி பாரதம் (தேவ)

கிரேக்க ஹூண யவனர்கள் புயலைப் போலத் தாக்கினர்
பஞ்ச நதிக்கரைதனில் தோல்வி கண்டு சாய்ந்தனர்
பஞ்சு போல பறந்தனர் காற்றிலே கலந்தனர்
கால வெள்ளப் போக்கிலே கடலுடன் கரைந்தனர்
பாரதத்தின் வீர சக்தி பாரிலே ஜொலித்தது
பாரிலே ஜொலித்தது (தேவ)

பாரதத்தின் மண்ணிலெங்கும் சுயநலம் படர்ந்தது
பாராக்ரமம் வளர்த்திடும் மரபுகள் தகர்ந்தன
போக வசதி ஆசையில் மூழ்கி வாழ்ந்த வேளையில்
துரோகிகள் மலிந்தனர் சுதந்திரம் அழிந்தது
தேசபக்தி ஜோதியேற்றி புத்துணர் வெழுப்புவோம்;
புத்துணர் வெழுப்புவோம் (தேவ)

உணவு உடைகள் ஜாதிகள் வழிபாட்டில் வேற்றுமை
உள்ளத்திலே கோவில் கொண்ட தர்மத்திலே ஒற்றுமை
முந்தையரின் உதிரம் நம்மை ஒரு குடும்ப மாக்குது
ஒருமையை உடைக்கவரும் மடமையை அகற்றுவோம்
ஒன்றுபட்ட பாரதத்தின் எழுச்சி கீதமே இது
எழுச்சி கீதமே இது (தேவ)

அதர்ம சக்தி ஓங்கி எங்கும் தலைவிரித்து ஆடுது
அந்நியர் வலை விரித்து வேட்டையும் நடக்குது
அன்னை அலறி அழும் குரல் நெஞ்சையே <<உருக்குது.
ராஷ்ட்ரபக்தி நறுமணம் நாட்டிலே நிரப்புவோம்
நாட்டினை எழுப்புவோம் இன்றைய பணி இது
இன்றைய பணி இது (தேவ)

மலையில மகுடம் வச்சு

மலையில மகுடம் வச்சு
கடலில பாதம் வச்சு
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா! காளி ஆத்தா
மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா! உன்னை நான்
பாராத்தாய் என்றழைப்பேன் எங்கள் ஆத்தா

எல்லையில எதிரிவந்து தொல்லை தரும் வேளையில
எல்லையம்மன் உருவில் நீயும் வாளெடுத்து நிக்கையிலே! பாரதாத்தா!

இல்லையங்கு எதிரிகள் ஓடிவிட்டார் அடி ஆத்தா!
உழைப்பு மிகுந்திருந்தால் உணவுக்குப் பஞ்சமில்லை
வாரி வழங்கிடும் எங்கள் ஆத்தாபாரதாத்தா! உன்னை நான்
மாரியம்மன் என்றழைப்பேன் எங்களாத்தா

கல்விக்கதிபதி நீ, கலைமகள் உன்பேரு
கற்றிடுவார் உலகத்து மக்களெல்லாம் உன்னிடத்தில்! பாரதாத்தா
கற்ற உந்தன் மக்களெல்லாம் சென்றிடவார் எட்டுத்திக்கும்
எத்தனை வடிவெடுத்து எங்களை நீ ஆண்டாலும்
அத்தனை வடிவிலுமே காண்பதுன்னை எங்களாத்தாபாரதாத்தா
பித்தனாய் உன் புகழை பாடிடுவேன் எங்கள் ஆத்தா

எம்மை ஈன்றே இன்னமுதூட்டிய பாரதமாதா வாழி

எம்மை ஈன்றே இன்னமுதூட்டிய பாரதமாதா வாழி
கோடி, கோடி வீரரின் தாயே ஜகஜனனீ சரண் புகுந்தோம்

உலகிலுயர்ந்த வெள்ளிப் பனிமலை
இமயமதனை நீ முடியென அணிந்தாய்
நளிர்மணி நீர்கள் நின்பதம் வருடம்
இணையிலா எழிலுருக் கொண்டோய் (எம்மை)

கங்கை யமுனை சிந்து காவிரி
நதிகள் உந்தன் அமுதினை அளிக்க
கண்ணன் குழலிசை கேட்ட த்வாரகை
கன்னிக் குமரியும் உடையோய் (எம்மை)

அன்பால் உலகை ஆட்கொள்ளும் தாய் நீ
மங்களம் நல்கும் கல்யாணி நீ
உன்னரும் லீலைகள் புத்துயிரூட்டிட
உயர்வுறு முனிவோர் உறைவே (எம்மை)

இன்னல் தீர்த்தே இன்பம் நல்கும்
இன்மை ஒழிக்கும் ஞானச்சுடர் நீ
ரிஷி, முனி, வீரர் யோகிகள் பணியும்,
மாயை மாய்க்கும் குரு நீ (எம்மை)

சக்தி சாலியாம் துர்க்கை நீயே
செல்வம் நல்கும் திருமகள் நீயே
கல்வி அளிக்கும் வாணியும் நீயே
ஈடிலா மைந்தரின் தாயே (எம்மை)

உன்பொருட்டே நாம் உலகில் வாழ்வோம்
உந்தன் அன்பாம் அமுதினை உன்போம்
உந்தன் வலியுறு மைந்தர் நாங்கள்
உன்பணி என்றும் புரிவோம் (எம்மை)

எங்கள் ஆருயிர்த் தாய்நாடே

எங்கள் ஆருயிர்த் தாய்நாடே
எங்கள் பாரதத் திருநாடே

உந்தன் மண்ணினை நீறாய் அணிந்தே
புண்ணிய மெய்திடுவோம்
உந்தன் நதியும் மலையும் வனமும்
புனிதத் தலமாகும் (எங்கள்)

நெஞ்சத்தே உன் நினைவெழும் போது
புளகம் தோன்றிடுது
மின்னலை பாயுது மெய்மறக்குது
மகிழ்வு பொங்கிடுது (எங்கள்)

வானவரெல்லாம் இங்கு பிறந்திட

வேட்கை கொண்டிடுரார்
புல்லாய்ப் புழுவாய்ப் பிறக்கினும் உன்மடி
தவழ்ந்திட ஏங்கிடுரார் (எங்கள்)

இமயமும் முடியாய்க் குமரியும் அடியாய்
நிற்கும் எம் தேவி
மாகாளி நீ பராசக்தி நீ
உலகோர் குலதெய்வம் (எங்கள்)

உன்னைத் தீண்டிட மாசு படுத்திட
எதிரியர் எண்ணுகையில்
உதிர அருவியால் ஆருயிர் பலியால்
மானம் காத்தனரே (எங்கள்)

இன்பம் வேண்டோம் நலன்கள் வேண்டோம்
நற்றவ வான் வேண்டோம்
அல்லும் பகலும் உன் ஏவல் புரியும்
அடிமைகள் ஆகிடுவோம் (எங்கள்)