Tuesday, May 25, 2010

எம்மை ஈன்றே இன்னமுதூட்டிய பாரதமாதா வாழி

எம்மை ஈன்றே இன்னமுதூட்டிய பாரதமாதா வாழி
கோடி, கோடி வீரரின் தாயே ஜகஜனனீ சரண் புகுந்தோம்

உலகிலுயர்ந்த வெள்ளிப் பனிமலை
இமயமதனை நீ முடியென அணிந்தாய்
நளிர்மணி நீர்கள் நின்பதம் வருடம்
இணையிலா எழிலுருக் கொண்டோய் (எம்மை)

கங்கை யமுனை சிந்து காவிரி
நதிகள் உந்தன் அமுதினை அளிக்க
கண்ணன் குழலிசை கேட்ட த்வாரகை
கன்னிக் குமரியும் உடையோய் (எம்மை)

அன்பால் உலகை ஆட்கொள்ளும் தாய் நீ
மங்களம் நல்கும் கல்யாணி நீ
உன்னரும் லீலைகள் புத்துயிரூட்டிட
உயர்வுறு முனிவோர் உறைவே (எம்மை)

இன்னல் தீர்த்தே இன்பம் நல்கும்
இன்மை ஒழிக்கும் ஞானச்சுடர் நீ
ரிஷி, முனி, வீரர் யோகிகள் பணியும்,
மாயை மாய்க்கும் குரு நீ (எம்மை)

சக்தி சாலியாம் துர்க்கை நீயே
செல்வம் நல்கும் திருமகள் நீயே
கல்வி அளிக்கும் வாணியும் நீயே
ஈடிலா மைந்தரின் தாயே (எம்மை)

உன்பொருட்டே நாம் உலகில் வாழ்வோம்
உந்தன் அன்பாம் அமுதினை உன்போம்
உந்தன் வலியுறு மைந்தர் நாங்கள்
உன்பணி என்றும் புரிவோம் (எம்மை)

No comments:

Post a Comment