எங்கள் ஆருயிர்த் தாய்நாடே
எங்கள் பாரதத் திருநாடே
உந்தன் மண்ணினை நீறாய் அணிந்தே
புண்ணிய மெய்திடுவோம்
உந்தன் நதியும் மலையும் வனமும்
புனிதத் தலமாகும் (எங்கள்)
நெஞ்சத்தே உன் நினைவெழும் போது
புளகம் தோன்றிடுது
மின்னலை பாயுது மெய்மறக்குது
மகிழ்வு பொங்கிடுது (எங்கள்)
வானவரெல்லாம் இங்கு பிறந்திட
வேட்கை கொண்டிடுரார்
புல்லாய்ப் புழுவாய்ப் பிறக்கினும் உன்மடி
தவழ்ந்திட ஏங்கிடுரார் (எங்கள்)
இமயமும் முடியாய்க் குமரியும் அடியாய்
நிற்கும் எம் தேவி
மாகாளி நீ பராசக்தி நீ
உலகோர் குலதெய்வம் (எங்கள்)
உன்னைத் தீண்டிட மாசு படுத்திட
எதிரியர் எண்ணுகையில்
உதிர அருவியால் ஆருயிர் பலியால்
மானம் காத்தனரே (எங்கள்)
இன்பம் வேண்டோம் நலன்கள் வேண்டோம்
நற்றவ வான் வேண்டோம்
அல்லும் பகலும் உன் ஏவல் புரியும்
அடிமைகள் ஆகிடுவோம் (எங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment