Tuesday, May 25, 2010

இதயத்தூறும் அன்பு அனைத்தும்

இதயத்தூறும் அன்பு அனைத்தும்
தாயின் திருவுருவில் கலந்து
இனிய பாரத தேவி ஆலயம்
புணரெழுப்ப ஆசை கொண்டோம்

உடலை வெட்டி செதுக்கி மாற்றி
கோவில் மதில்கள் எழுந்து நிற்கும்
உருவிழந்து ஆழப் புதைந்து
மண்ணின் கீழே மூடி மறையும்
வெற்றி தோல்வி புகழ்ச்சி இகழ்ச்சி
ஆசை எல்லாம் அறவே நீங்கும்
இரவு பகலாய் மௌனமாக
ஆலயத்தை சுமந்து நிற்கும்
இன்பம் வந்தால் மகிழ்வதில்லை
துன்பம் கண்டு அழுவதில்லை
ஆலயத்தின் அடித்தளக்கல்
ஆகவே நாம் ஆசை கொண்டோம்
(இதயத்துõறும்)

பரிகாசிப்போர் கேலி செய்வோர்
ஏளனத்தை சகித்த போதும்
புனித ஒளியை அளிக்க வேண்டி
அணு அணுவென உடலை எரித்து
தொன்மை மிகு வரலாறு காட்டும்
துõய ஒளியைப் பரப்ப வேண்டி
பாதை காட்டுது தெய்வ தீபம்
சாதகன் முன்னேறுகின்றான்
தீபத்தின் வைராக்யம் நம்மை
ஊக்கு வித்தே உணர்ச்சி தந்திட
காரிருளிலே சூன்யப்பாதையில்
ஒளிபரப்பிட ஆசை கொண்டோம்
(இதயத்துõறும்)

காணப்பொழுதேனும் ஓய்வு இன்றி
புயலுடனே போராட வேண்டும்
கொந்தளிக்கும் அலைகளிடையே
உறுதியுடன் முன்னேற வேண்டும்
உடைக்க வந்திடும் பேரலைகளின்
தாக்குதலையே தாங்க வேண்டும்
மெல்லவே முன்னேறிச் சென்று
லட்சியக் கரை யேற வேண்டும்
தனது உடலை தனது எனவே
கூறவே வழி இன்றிப் போகும்
ராஷ்ட்ரப்படகினை வழி நடத்தும்
கருவியாகிட ஆசை கொண்டோம்
(இதயத்துõறும்)

No comments:

Post a Comment