இன்னமுதமாம் ராஷ்ட்ரபக்தி
நாடு முழுவதும் பரவும் போதும்
இடர்கள் யாவும் நடுங்கி ஓடும்
நாடு வென்றே வாகை சூடும்
காரிருள் தன்னை கண்டு அஞ்சி
கதிரவனுமே ஒளிவதுண்டோ?
காடு மலைகள் அணைகள் யாவும்
பெருகும் நதியை தடுப்பதுண்டோ?
சாடும் இன்னல் மலை கடந்து
ஏற்ற வழியில் ஏகுவானே
தேடிவந்தே புகழும் சூழும்
பகைவரெல்லாம் புழுதி ஆவர்
குறியை அடைய முனையும் போது
முள்ளும் கல்லும் மலர்களாகும்
(இடர்கள்)
கதிரவன் வழி தோன்றலானால்
கதிகலங்கி விலகுவோமோ
நதியினின்றும் ஊக்கம் கொண்டால்
தயங்கி வழியில் விலகுவோமோ
நல்வழியில் நிலைத்து நிற்கும்
எம்மை பிறழவைப்பவர் யார்?
சீறும் எரிமலை தணையனைக்கும்
திறமை படைத்தவர் எவருமுண்டோ?
சாவு வரினும் மன மகிழ்ந்தே
ஏகி விட்டோம் வாளை ஏந்தி
(இடர்கள்)
புதுமை அறிவுத் துறைகளில் நாம்
நிகரிலா முன்னேற்றம் காண்போம்
பரந்த வானின் புதிர்களெல்லாம்
புதிய வழியில் புரிய வைப்போம்
பிடித்து அலைக்கும் போகப் பேயை
விரட்டி தியாக உணர்வளிப்போம்
அடிமை வாழ்வாம் இழிவு நீக்கி
இன்ப மழையைப் பொழிய வைப்போம்
கனவு இதனை நனவு ஆக்க
திரண்டு எழுவோம் ஹிந்து மைந்தர் (இடர்கள்)
No comments:
Post a Comment