Thursday, December 23, 2010

புதிய பாரதம் தலையெடுக்க புதிய தலைமை மலர வேண்டும்

30.
புதிய பாரதம் தலையெடுக்க
புதிய தலைமை மலர வேண்டும்

பாரத தேவி கலங்குகின்றாள்
பாரத மைந்தர் வீழ்ச்சி கண்டு
நறுமலர்ச்சி காண வேண்டின்
நல்லவர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
நேர்மையாளர் வீர நெஞ்சர்
நம்ம இயலும் நாணயத்தோர்
தொண்டு செய்ய விரதம் பூண்டோர்
தூயவர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

தன்னலத்தைத் தள்ளி வைத்தே
தாயகத்தின் நலன் விழைவோர்
பதவி மோகம் சிறுதுமற்ற
பண்பினர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

அரசபோகம் சூழந்தபோதும்
அறத்தின் நெறியை மறந்திடாதோர்
புகழுரைக்க மயங்கிடதோர்
புனிதர்கள் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

வேஷம், பொய்மை, தந்திரத்தால்
கோஷத்தால் திசை திருப்பிடாதோர்
விலைக்கு வாங்கிட இடங்கொடாதோர்
வீரர்கள் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

உள்ளும் புறமும் உயர்ந்து நிற்போர்
உள்ளத்திண்மையில் மேரு போன்றோர்
திறமை வளரத் தவமியற்றும்
தகைமையாளர் திரள வேண்டும்
(புதிய தலைமை)

சும்மாவா வந்தது? சுதந்திரம் என்பது

29.
சும்மாவா வந்தது?
சுதந்திரம் என்பது
சும்மாவா வந்தது?

எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்
தூக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை
தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை
(சும்மாவா)

ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சிவார் பெரியோர்
மாசுபேசி மயக்கிடவே முனைந்து நிற்கும் சுற்றம்
இருந்தபோதும் லக்ஷியத்தில் வீறுநடைபோட்டு
இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)

போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும்
பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும்
அன்னையார்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க
தன்னைத்தானே அழித்துக் கொண்டோர் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)

இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம் இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்

28.
இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம்
இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்

மாமலை இமய மகத்துவம் கேளீர்
மாளா உறுதியின்வடிவது பாரீர்
அதோ சமுத்திர சங்கம நாட்டம்
சாதா விரைந்திடும் நதிநீர் காட்டும்
குறியில் குலையா உறுதியில் முன்னம்
நெறியில் தடைகள் தாகர்வது திண்ணம்
(இனி முள் மீதும்)

சுயபலக் கவசம் அணிந்திருப்போனை
நயமுடன் இறைவனும் நாடிடு வானே
அன்னியர் தயவினை அண்டுவோர் தம்மை
அன்னியர் ஆக்குவர் தம்கைப் பொம்மை
வாழ்வின் உண்மை நெறியது உணர்ந்தே
வாழ்வுப் பாதையில் முன்னேறிடுவோம்
(இனி முள் மீதும்)

நம்முடைப் பாய்ச்சல் மின்னலைப் போலே
நம்முடை கர்ஜனை இடியினைப் போலே
நம்முடைப் பெருமிதம் விண்ணளாவுது
விம்மிடும் கடலலை நம்புகழ் பாடுது
ஆழ்கடல் போலே ஆழ்ந்த அறிவுடன்
சூழிளந்த தென்றலின் சூழற்சி கற்றிடுவோம்
(இனி முள் மீதும்)

எழுவோம் இன்றே இருள் மயமான
வழிஒளி பெற்றே விளங்கிடச் செய்வோம்
முழு இருள் தன்னை அடியொடு மாய்த்து
எழுகதிர் ஒளியினை ஏற்றிடுவோமே
எமதென எதுவும் இன்றியே இனிநாம்
உமிழொளிச் சுடர்போல் உயர்வது பயில்வோம்
(இனி முள் மீதும்)

லட்சியப் பாதையில் முன்னேரிவரும் வீரா பின்னோக்காதே

27.
லட்சியப் பாதையில் முன்னேரிவரும்
வீரா பின்னோக்காதே
துணிவினை இழந்து விடாதே

ஆண்மையின் வடிவம் வீரமகன் நீ
ஆற்றலில் உனக்கினை இல்லை
தூய்மையின் உருவம் தியாகச் சின்னம்
தெய்வத்துணை உனக்குண்டு
கானல் நீராம் மோக மாயையில்
கணமும் மயங்கி விடாதே (துணிவினை)

எத்தனை தூரம் எத்தனை காலம்
என்றே சோர்ந்து விடாதே
உலகம் என்னுடன் வருமோ என்று
உள்ளம் ஏங்கி விடாதே
லக்ஷிய மெய்திட உடல் பொருள் ஆவியியை
அளித்திட தயங்கி விடாதே (துணிவினை)

உன்னை நம்பியே நாடு வாழுது
நீயே நல்லாதாரம்
உனது தோளுடன் தோளிணைந்திட
உணர்ந்து வருகுது தேசம்
ஒய்வொளி வின்றி தர்மப் பாதையில்
ஏகிட மறந்து விடாதே (துணிவினை)

அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம் பாவன பாரத அன்னையே!

26.
அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம்
பாவன பாரத அன்னையே!

முக்தி ரகசியம் உலகுக் களித்த நீ
தன்னை மறந்தின்று வாழ்வது மேன்?
அன்னபூரணி வறண்டதோ உன்கை?
வாடி வதங்கி நீ நிற்பதுமேன்? (அண்டம்)

தூசு படிந்துன் தேசம் புரண்டிட
விணைக் குரலும் பஞ்சடைந்ததோ?
ராஜராஜேஸ்வரி! ஏழை அனாதையாய்
ஏந்தலாய் இன்று நீ ஆகினையே! (அண்டம்)

வெட்டுண்டு உன் உடல் குறுகிச் சுருங்கிட
வடித்தாழ்ந்தே உந்தன் கொடி பறக்குது
ரத்னமணிந்தாய்! இன்றனை இழந்தே
பிச்சை உண்ணும் நிலை வந்ததுமேன்? (அண்டம்)

எங்கே உந்தன் பூர்வ மகிமை
எங்கே உந்தன் பேர் புகழெல்லாம்
ஆதிசக்தி! நீ சக்தி இழந்தாயோ?
மண்பும் அழிந்தின்றிழிந்தனையே! (அண்டம்)

புனித உன் உடலினைக் கந்தைகள் மூடிட
நரிகளும் நாய்களும் உந்தனைச் சூழுது
ஹே சிவே! கௌரீ! இவ்வேடம் உனக்கேன்?
மாயையை மாய்த்திடும் அன்னையே! (அண்டம்)

அமுத கலசமும் அருள் மனமும் கொண்டோய்
எழுந்திடு எங்களை ஈன்றவளே!
கோடிக்கோடி உந்தன் மைந்தர்கள் வாழ்க்கையில்
திறனில்லா அல்ல நீ தேசுடையோய் (அண்டம்)

உலகோரின் பிச்சையை ஏற்றிட வேண்டாம்
எழுந்திடு உலகினை ஆண்டிடுவாய்
பளபளத்திடும் உன் சூலத்தை ஏந்திடு
தீமை ஒழித்திடு! ஆட்சி நடத்திடு! (அண்டம்)

புது வரலாற்றினைப் படைக்ககிறான் புத்துயிர் எங்கும் அளிக்கிறான்

25.
புது வரலாற்றினைப் படைக்ககிறான்
புத்துயிர் எங்கும் அளிக்கிறான்
பாரதத் தாயின் பாத மலரிலே
மலராகிடும் இளைஞன்
இளம் வயதினிலே காடேகி
இன்னுயிர் சீதையை இழக்கின்றான்
இலங்கை அரக்கன் கொடுங்கோலழித்தே
அறத்தின் அரசை அமைக்கின்றான்
மறத்தின் தீமை தகர்க்கின்றான் (புது)

மாரதர் முன்னே கதறுகிறான்
மானம் இழந்தே பாஞ்சாலி
மௌனம் காக்கும் முதியோரிடையே
காளை கண்ணன் வருகின்றான்
கற்பினுக் கபயம் தருகின்றான் (புது)

பெருங்கடல் கடந்து செல்கின்றான்
பேரரசாட்சி அமைக்கின்றான்
புவியில் பாரதக் கொடியினை நாட்டி
புகழைக் காலில் குவிக்கின்றான்
புனிதத் தாயைப் பணிக்கின்றான் (புது)

பசியால் குழந்தை மடிகின்றது
பட்டமகிஷியும் துடிக்கின்றால்
சுதந்திர தேவியின் புனிதம் காக்க
பாலியாகின்றான் பிரதாபனும்
ஒளியாகின்றான் காரிருளில் (புது)

தூக்கு மேடையே மணமேடை
தாக்கி யழிப்போம் அன்னியரை
எங்கள் அன்னை கைவிலங்கொடிப்போம்
என்று கிளர்ந்தது புரட்சிக் கனல்
ஒன்றி மகிழ்ந்து வரலாற்றில் (புது)

பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம்

24.
பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம்
பாரதத் தாயின் பழமை பெருமை இன்றே உணர்ந்திடுவோம்

வியாசன் படைத்த மாபாரதமும்
வள்ளுவன் தீட்டிய முப்பால் நூலும்
வையம் முழுவதும் போற்றி வணங்கிடும்
இலக்கியம் கண்டவளாம்
(பாரதத் தாயின்)
தன்னெலும்பீந்த ததீசி முனியும்
தன்னையளித்த சம்யம் ராயும்
தலையைக் கொடுத்த குமணன் போன்ற
தியாகியர் தாயவளாம்
(பாரதத் தாயின்)
விஜயன் வீமன் வீரவடிவினில்
புருஷோத்தமனாய் பிரதாயனாக
சிவாஜி மற்றும் ஜான்சி ராணியாய்
தீரம் காட்டினளே
(பாரதத் தாயின்)
நரேந்திரனுருவில் நானிலம் வென்றே
நம்முடை நெறியின் உயர்வை நாட்டி
உலகோரிடையே மங்கிய தன்புகழ்
ஓங்கிடச் செய்தனலே
(பாரதத் தாயின்)

தியாகம் யோகம் ஞானம் வீரம்
தூய்மை எளிமை அணிகளாணிந்த
பாரதத்தாயைப் பாரின் தலைமையில்
விரைந்தே நாட்டிடுவோம்
(பாரதத் தாயின்)