28.
இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம்
இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்
மாமலை இமய மகத்துவம் கேளீர்
மாளா உறுதியின்வடிவது பாரீர்
அதோ சமுத்திர சங்கம நாட்டம்
சாதா விரைந்திடும் நதிநீர் காட்டும்
குறியில் குலையா உறுதியில் முன்னம்
நெறியில் தடைகள் தாகர்வது திண்ணம்
(இனி முள் மீதும்)
சுயபலக் கவசம் அணிந்திருப்போனை
நயமுடன் இறைவனும் நாடிடு வானே
அன்னியர் தயவினை அண்டுவோர் தம்மை
அன்னியர் ஆக்குவர் தம்கைப் பொம்மை
வாழ்வின் உண்மை நெறியது உணர்ந்தே
வாழ்வுப் பாதையில் முன்னேறிடுவோம்
(இனி முள் மீதும்)
நம்முடைப் பாய்ச்சல் மின்னலைப் போலே
நம்முடை கர்ஜனை இடியினைப் போலே
நம்முடைப் பெருமிதம் விண்ணளாவுது
விம்மிடும் கடலலை நம்புகழ் பாடுது
ஆழ்கடல் போலே ஆழ்ந்த அறிவுடன்
சூழிளந்த தென்றலின் சூழற்சி கற்றிடுவோம்
(இனி முள் மீதும்)
எழுவோம் இன்றே இருள் மயமான
வழிஒளி பெற்றே விளங்கிடச் செய்வோம்
முழு இருள் தன்னை அடியொடு மாய்த்து
எழுகதிர் ஒளியினை ஏற்றிடுவோமே
எமதென எதுவும் இன்றியே இனிநாம்
உமிழொளிச் சுடர்போல் உயர்வது பயில்வோம்
(இனி முள் மீதும்)
No comments:
Post a Comment