Thursday, December 23, 2010

அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம் பாவன பாரத அன்னையே!

26.
அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம்
பாவன பாரத அன்னையே!

முக்தி ரகசியம் உலகுக் களித்த நீ
தன்னை மறந்தின்று வாழ்வது மேன்?
அன்னபூரணி வறண்டதோ உன்கை?
வாடி வதங்கி நீ நிற்பதுமேன்? (அண்டம்)

தூசு படிந்துன் தேசம் புரண்டிட
விணைக் குரலும் பஞ்சடைந்ததோ?
ராஜராஜேஸ்வரி! ஏழை அனாதையாய்
ஏந்தலாய் இன்று நீ ஆகினையே! (அண்டம்)

வெட்டுண்டு உன் உடல் குறுகிச் சுருங்கிட
வடித்தாழ்ந்தே உந்தன் கொடி பறக்குது
ரத்னமணிந்தாய்! இன்றனை இழந்தே
பிச்சை உண்ணும் நிலை வந்ததுமேன்? (அண்டம்)

எங்கே உந்தன் பூர்வ மகிமை
எங்கே உந்தன் பேர் புகழெல்லாம்
ஆதிசக்தி! நீ சக்தி இழந்தாயோ?
மண்பும் அழிந்தின்றிழிந்தனையே! (அண்டம்)

புனித உன் உடலினைக் கந்தைகள் மூடிட
நரிகளும் நாய்களும் உந்தனைச் சூழுது
ஹே சிவே! கௌரீ! இவ்வேடம் உனக்கேன்?
மாயையை மாய்த்திடும் அன்னையே! (அண்டம்)

அமுத கலசமும் அருள் மனமும் கொண்டோய்
எழுந்திடு எங்களை ஈன்றவளே!
கோடிக்கோடி உந்தன் மைந்தர்கள் வாழ்க்கையில்
திறனில்லா அல்ல நீ தேசுடையோய் (அண்டம்)

உலகோரின் பிச்சையை ஏற்றிட வேண்டாம்
எழுந்திடு உலகினை ஆண்டிடுவாய்
பளபளத்திடும் உன் சூலத்தை ஏந்திடு
தீமை ஒழித்திடு! ஆட்சி நடத்திடு! (அண்டம்)

No comments:

Post a Comment