Tuesday, December 21, 2010

உலகின் குருவாய் பாரதம் ஆகிட

12.
உலகின் குருவாய் பாரதம் ஆகிட
உன்னத சக்தி வளர்ப்போம் நாம்
லட்சிய நாடாய் பாரதம் ஆகிட
தீவிர பக்தி வளர்ப்போம் நாம்

வலிவு படைத்திடு வீரம் கொண்டிடு
என்றெம் முந்தையர் முழங்குகிறார்
கலியுகத்தினிலே சங்கமே சக்தி
என்று மறைகள் கூறிடுது
வழுவா தேகும் வீரர் நாம் (உலகின்)
நாட்டினுக் கெனவே இறைவன் படைத்தான்
வேறொரு இன்பம் விரும்போமே
இடர்கள் எம்மை இரும்பென ஆக்கும்
இன்முகத்துடனே ஏற்றிடுவோம்
வெந்தே போயினும் நொந்தே மாயினும்
வந்தே மாதரம் என்றிடுவோம் (உலகின்)
தியாகம் எங்கள் கவசம் ஆகும்
சீலம் எங்கள் ஆயுதமே
வெற்றி கண்டிடப் பிறந்தோம் உலகின்
தோல்வி கண்டே தளரோமே
தீமை சூழ்ந்திடும் உலகில் நாங்கள்
தர்மக் கொடியினை உயர்த்திடுவோம் (உலகின்)

No comments:

Post a Comment