23.
ஆசியளித்திடுவாய் நீ - எந்தன்
ஆசை நிறைவேற - உன்னருள்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததே
மணியெனக் காத்த பாரத நாட்டின்
அங்கம் சிதைந்தே அலறிடும் நிலைமையை
மாற்றிட வல்லமை வேண்டும் (தாயே)
பாரத நாடாம் நந்தவனமிதில்
நச்சு விளைந்தே நாசம் தோன்றுது
ருத்திரன் போல கோலம் கொண்டே
தீமை யொழித்திட வேண்டும் (தாயே)
துயருறு நாட்டின் சிந்தையாலே
துடித்திடும் உள்ளம் அளித்திட வேண்டும்
வாழ்வின் விளக்கினை உன் பணிக் கெனவே
அணைத்திடும் வல்லமை வேண்டும் (தாயே)
தோல்வியை கண்டே தளராத நெஞ்சும்
வெற்றி கண்டிட வீர விரதமும்
தூய்மையும் எளிமையும் துவங்கிடும் வாழ்வும்
நீ யெனக்கருளல் வேண்டும் (தாயே)
இடியும் புயலும் இருளும் சேர்ந்தே
இன்னல் கூட்டி கலக்கிடும் போதினில்
தாயே உந்தன் திவ்யப் பணியில்
தளராதேகிட வேண்டும் (தாயே)
No comments:
Post a Comment