Tuesday, December 21, 2010

பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்


13.
பாரதத் தாயைப் பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே
துõய மலர்கள் நாம்
பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால்
பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் இன்பத் தமிழும்
எங்கள தென்றிடுவோம்
கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு
ஹிந்தியும் எங்களதே (பாரதத்)

குமரி முனையிலே தவம்செய் சக்தி
இமயம் உறை ஈசன்
ராமேஸ்வரமும் காசியும் அதனை
வழிபடு பக்தர்களும்
நர்மதை கங்கை காவிரி நதியும்
ஒருமை உணர்த்திடுது (பாரதத்)

ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு
ஆனால் நாம் ஒன்று
மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று
வழிபடு தெய்வம் பலவானாலும்
அனைவருமே ஹிந்து (பாரதத்)

தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே
நாட்டின் உடமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு?
செய்தொழிலினிலே வேறுபட்டாலும்
யாதுமவள் தொழிலாம் (பாரதத்)

No comments:

Post a Comment