Thursday, December 23, 2010

புதிய பாரதம் தலையெடுக்க புதிய தலைமை மலர வேண்டும்

30.
புதிய பாரதம் தலையெடுக்க
புதிய தலைமை மலர வேண்டும்

பாரத தேவி கலங்குகின்றாள்
பாரத மைந்தர் வீழ்ச்சி கண்டு
நறுமலர்ச்சி காண வேண்டின்
நல்லவர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
நேர்மையாளர் வீர நெஞ்சர்
நம்ம இயலும் நாணயத்தோர்
தொண்டு செய்ய விரதம் பூண்டோர்
தூயவர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

தன்னலத்தைத் தள்ளி வைத்தே
தாயகத்தின் நலன் விழைவோர்
பதவி மோகம் சிறுதுமற்ற
பண்பினர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

அரசபோகம் சூழந்தபோதும்
அறத்தின் நெறியை மறந்திடாதோர்
புகழுரைக்க மயங்கிடதோர்
புனிதர்கள் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

வேஷம், பொய்மை, தந்திரத்தால்
கோஷத்தால் திசை திருப்பிடாதோர்
விலைக்கு வாங்கிட இடங்கொடாதோர்
வீரர்கள் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)

உள்ளும் புறமும் உயர்ந்து நிற்போர்
உள்ளத்திண்மையில் மேரு போன்றோர்
திறமை வளரத் தவமியற்றும்
தகைமையாளர் திரள வேண்டும்
(புதிய தலைமை)

சும்மாவா வந்தது? சுதந்திரம் என்பது

29.
சும்மாவா வந்தது?
சுதந்திரம் என்பது
சும்மாவா வந்தது?

எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்
தூக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை
தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை
(சும்மாவா)

ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சிவார் பெரியோர்
மாசுபேசி மயக்கிடவே முனைந்து நிற்கும் சுற்றம்
இருந்தபோதும் லக்ஷியத்தில் வீறுநடைபோட்டு
இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)

போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும்
பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும்
அன்னையார்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க
தன்னைத்தானே அழித்துக் கொண்டோர் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)

இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம் இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்

28.
இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம்
இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்

மாமலை இமய மகத்துவம் கேளீர்
மாளா உறுதியின்வடிவது பாரீர்
அதோ சமுத்திர சங்கம நாட்டம்
சாதா விரைந்திடும் நதிநீர் காட்டும்
குறியில் குலையா உறுதியில் முன்னம்
நெறியில் தடைகள் தாகர்வது திண்ணம்
(இனி முள் மீதும்)

சுயபலக் கவசம் அணிந்திருப்போனை
நயமுடன் இறைவனும் நாடிடு வானே
அன்னியர் தயவினை அண்டுவோர் தம்மை
அன்னியர் ஆக்குவர் தம்கைப் பொம்மை
வாழ்வின் உண்மை நெறியது உணர்ந்தே
வாழ்வுப் பாதையில் முன்னேறிடுவோம்
(இனி முள் மீதும்)

நம்முடைப் பாய்ச்சல் மின்னலைப் போலே
நம்முடை கர்ஜனை இடியினைப் போலே
நம்முடைப் பெருமிதம் விண்ணளாவுது
விம்மிடும் கடலலை நம்புகழ் பாடுது
ஆழ்கடல் போலே ஆழ்ந்த அறிவுடன்
சூழிளந்த தென்றலின் சூழற்சி கற்றிடுவோம்
(இனி முள் மீதும்)

எழுவோம் இன்றே இருள் மயமான
வழிஒளி பெற்றே விளங்கிடச் செய்வோம்
முழு இருள் தன்னை அடியொடு மாய்த்து
எழுகதிர் ஒளியினை ஏற்றிடுவோமே
எமதென எதுவும் இன்றியே இனிநாம்
உமிழொளிச் சுடர்போல் உயர்வது பயில்வோம்
(இனி முள் மீதும்)

லட்சியப் பாதையில் முன்னேரிவரும் வீரா பின்னோக்காதே

27.
லட்சியப் பாதையில் முன்னேரிவரும்
வீரா பின்னோக்காதே
துணிவினை இழந்து விடாதே

ஆண்மையின் வடிவம் வீரமகன் நீ
ஆற்றலில் உனக்கினை இல்லை
தூய்மையின் உருவம் தியாகச் சின்னம்
தெய்வத்துணை உனக்குண்டு
கானல் நீராம் மோக மாயையில்
கணமும் மயங்கி விடாதே (துணிவினை)

எத்தனை தூரம் எத்தனை காலம்
என்றே சோர்ந்து விடாதே
உலகம் என்னுடன் வருமோ என்று
உள்ளம் ஏங்கி விடாதே
லக்ஷிய மெய்திட உடல் பொருள் ஆவியியை
அளித்திட தயங்கி விடாதே (துணிவினை)

உன்னை நம்பியே நாடு வாழுது
நீயே நல்லாதாரம்
உனது தோளுடன் தோளிணைந்திட
உணர்ந்து வருகுது தேசம்
ஒய்வொளி வின்றி தர்மப் பாதையில்
ஏகிட மறந்து விடாதே (துணிவினை)

அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம் பாவன பாரத அன்னையே!

26.
அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம்
பாவன பாரத அன்னையே!

முக்தி ரகசியம் உலகுக் களித்த நீ
தன்னை மறந்தின்று வாழ்வது மேன்?
அன்னபூரணி வறண்டதோ உன்கை?
வாடி வதங்கி நீ நிற்பதுமேன்? (அண்டம்)

தூசு படிந்துன் தேசம் புரண்டிட
விணைக் குரலும் பஞ்சடைந்ததோ?
ராஜராஜேஸ்வரி! ஏழை அனாதையாய்
ஏந்தலாய் இன்று நீ ஆகினையே! (அண்டம்)

வெட்டுண்டு உன் உடல் குறுகிச் சுருங்கிட
வடித்தாழ்ந்தே உந்தன் கொடி பறக்குது
ரத்னமணிந்தாய்! இன்றனை இழந்தே
பிச்சை உண்ணும் நிலை வந்ததுமேன்? (அண்டம்)

எங்கே உந்தன் பூர்வ மகிமை
எங்கே உந்தன் பேர் புகழெல்லாம்
ஆதிசக்தி! நீ சக்தி இழந்தாயோ?
மண்பும் அழிந்தின்றிழிந்தனையே! (அண்டம்)

புனித உன் உடலினைக் கந்தைகள் மூடிட
நரிகளும் நாய்களும் உந்தனைச் சூழுது
ஹே சிவே! கௌரீ! இவ்வேடம் உனக்கேன்?
மாயையை மாய்த்திடும் அன்னையே! (அண்டம்)

அமுத கலசமும் அருள் மனமும் கொண்டோய்
எழுந்திடு எங்களை ஈன்றவளே!
கோடிக்கோடி உந்தன் மைந்தர்கள் வாழ்க்கையில்
திறனில்லா அல்ல நீ தேசுடையோய் (அண்டம்)

உலகோரின் பிச்சையை ஏற்றிட வேண்டாம்
எழுந்திடு உலகினை ஆண்டிடுவாய்
பளபளத்திடும் உன் சூலத்தை ஏந்திடு
தீமை ஒழித்திடு! ஆட்சி நடத்திடு! (அண்டம்)

புது வரலாற்றினைப் படைக்ககிறான் புத்துயிர் எங்கும் அளிக்கிறான்

25.
புது வரலாற்றினைப் படைக்ககிறான்
புத்துயிர் எங்கும் அளிக்கிறான்
பாரதத் தாயின் பாத மலரிலே
மலராகிடும் இளைஞன்
இளம் வயதினிலே காடேகி
இன்னுயிர் சீதையை இழக்கின்றான்
இலங்கை அரக்கன் கொடுங்கோலழித்தே
அறத்தின் அரசை அமைக்கின்றான்
மறத்தின் தீமை தகர்க்கின்றான் (புது)

மாரதர் முன்னே கதறுகிறான்
மானம் இழந்தே பாஞ்சாலி
மௌனம் காக்கும் முதியோரிடையே
காளை கண்ணன் வருகின்றான்
கற்பினுக் கபயம் தருகின்றான் (புது)

பெருங்கடல் கடந்து செல்கின்றான்
பேரரசாட்சி அமைக்கின்றான்
புவியில் பாரதக் கொடியினை நாட்டி
புகழைக் காலில் குவிக்கின்றான்
புனிதத் தாயைப் பணிக்கின்றான் (புது)

பசியால் குழந்தை மடிகின்றது
பட்டமகிஷியும் துடிக்கின்றால்
சுதந்திர தேவியின் புனிதம் காக்க
பாலியாகின்றான் பிரதாபனும்
ஒளியாகின்றான் காரிருளில் (புது)

தூக்கு மேடையே மணமேடை
தாக்கி யழிப்போம் அன்னியரை
எங்கள் அன்னை கைவிலங்கொடிப்போம்
என்று கிளர்ந்தது புரட்சிக் கனல்
ஒன்றி மகிழ்ந்து வரலாற்றில் (புது)

பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம்

24.
பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம்
பாரதத் தாயின் பழமை பெருமை இன்றே உணர்ந்திடுவோம்

வியாசன் படைத்த மாபாரதமும்
வள்ளுவன் தீட்டிய முப்பால் நூலும்
வையம் முழுவதும் போற்றி வணங்கிடும்
இலக்கியம் கண்டவளாம்
(பாரதத் தாயின்)
தன்னெலும்பீந்த ததீசி முனியும்
தன்னையளித்த சம்யம் ராயும்
தலையைக் கொடுத்த குமணன் போன்ற
தியாகியர் தாயவளாம்
(பாரதத் தாயின்)
விஜயன் வீமன் வீரவடிவினில்
புருஷோத்தமனாய் பிரதாயனாக
சிவாஜி மற்றும் ஜான்சி ராணியாய்
தீரம் காட்டினளே
(பாரதத் தாயின்)
நரேந்திரனுருவில் நானிலம் வென்றே
நம்முடை நெறியின் உயர்வை நாட்டி
உலகோரிடையே மங்கிய தன்புகழ்
ஓங்கிடச் செய்தனலே
(பாரதத் தாயின்)

தியாகம் யோகம் ஞானம் வீரம்
தூய்மை எளிமை அணிகளாணிந்த
பாரதத்தாயைப் பாரின் தலைமையில்
விரைந்தே நாட்டிடுவோம்
(பாரதத் தாயின்)

ஆசியளித்திடுவாய் நீ - எந்தன் ஆசை நிறைவேற - உன்னருள்

23.
ஆசியளித்திடுவாய் நீ - எந்தன்
ஆசை நிறைவேற - உன்னருள்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததே
மணியெனக் காத்த பாரத நாட்டின்
அங்கம் சிதைந்தே அலறிடும் நிலைமையை
மாற்றிட வல்லமை வேண்டும் (தாயே)

பாரத நாடாம் நந்தவனமிதில்
நச்சு விளைந்தே நாசம் தோன்றுது
ருத்திரன் போல கோலம் கொண்டே
தீமை யொழித்திட வேண்டும் (தாயே)

துயருறு நாட்டின் சிந்தையாலே
துடித்திடும் உள்ளம் அளித்திட வேண்டும்
வாழ்வின் விளக்கினை உன் பணிக் கெனவே
அணைத்திடும் வல்லமை வேண்டும் (தாயே)

தோல்வியை கண்டே தளராத நெஞ்சும்
வெற்றி கண்டிட வீர விரதமும்
தூய்மையும் எளிமையும் துவங்கிடும் வாழ்வும்
நீ யெனக்கருளல் வேண்டும் (தாயே)

இடியும் புயலும் இருளும் சேர்ந்தே
இன்னல் கூட்டி கலக்கிடும் போதினில்
தாயே உந்தன் திவ்யப் பணியில்
தளராதேகிட வேண்டும் (தாயே)

Tuesday, December 21, 2010

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம், பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்
எந்த மதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்
முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம்

ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிது
ஆதிமூல நாயகனைக் கண்ட மதமிது
ஓதிஓதி உண்மைதனை உரைத்த மதமிது
நீதிதேவன் கோயில்கொண்டு நிலைத்த மதமிது

அன்புவழி காட்டுவதும் ஹிந்து தர்மமே
இன்ப நிலை கூட்டுவதும் ஹிந்து தர்மமே
முன்பு உலகை உயர்த்தியதும் ஹிந்து தர்மமே
துன்ப நிலை நீக்கியதும் ஹிந்து தர்மமே

பெற்ற தாயைப் பிறந்த மக்கள் வெறுப்பதுமுண்டோ
உற்ற தந்தை இல்லையென்று உரைப்பவருண்டோ
முற்றும் உணர்ந்த ஹிந்து தர்ம முறையறியாமல்
தெற்றுக் கூறும் தீயர்மனம் திருந்தச் செய்குவோம்

உனது நாடு உனது வேதம் உரிமைக்காக வா
தனது மானம் தனது மதம் தர்மம் காக்க வா
இனிய பூமி எங்கள் பூமி என்று சொல்ல வா
புனித மதம் ஹிந்து மதம் என்று புகழ வா

புனித நன்னாளில் இன்று பூஜை செய்கிறோம், பூஜையாகிற நல்ல மலர்களாகிறோம்

புனித நன்னாளில் இன்று பூஜை செய்கிறோம்
பூஜையாகிற நல்ல மலர்களாகிறோம்
இந்த நாள் வரை நான் தந்ததோர் பணம் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நனே அர்ப்பணம்
ஜெயஜெய பகவா குருவே ஜெயஜெய பகவா
ஜெயஜெய பகவா கொடியே ஜெயஜெய பகவா

என்று தோன்றினை எனவே கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா குருவே தொழுதொழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஓங்கி உயர்ந்திட குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)

தியாகத்தின் உரு நீ, குருவே தூய்மையின் உரு நீ
தர்மம் காக்கும் போரில் சாட்சி ஆகி நின்றவன் நீ
தர்மம் காக்கவே நாங்கள் அணி திரண்டுள்ளோம் அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)

குருதி சிந்தியே விடுதலைக் கோட்டை கட்டினார் அந்தக்
கோட்டையில் உச்சியில் அழகாய் உன்னை நாட்டினார்
உறுதி கொண்டோம் உலகரங்கில் உன்னை உயர்த்திட அதனால்
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)

செல்வத்தை தந்தேன் உடலின் உழைப்பினை தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்த போதும் மனம் அமைதியற்றதால் குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்
(ஜெயஜெய பகவா)

சிவாஜி மன்னா! நின் நினைவு வீறு தந்திடும்

22.
சிவாஜி மன்னா! நின் நினைவு வீறு தந்திடும்
சிவாஜி மன்னா! நின் நினைவு வீறு தந்திடும்

அபார சக்திவாய்ந்த வீரர்
தன்னலத்தில் மூழ்கினார்
அன்னியன் கீழ் அடிமையாகி
அஞ்சிகெஞ்சி வாழ்ந்தனர்
அச்சம் போக்கி சுதந்திரத்தின்
வேட்கை தந்தனை
(சிவாஜி)
அன்னையர் தம் கற்பிழந்து
அவலமாகி நின்றவனர்
ஆலயத்தின் அழிவு கண்டு
உள்ளம் நொந்து வாடினர்
ஆண்மையூட்டி சிம்மாக்கி
இழிவகற்றினை
(சிவாஜி)

சிறு படையாங் பகப்படையை
புழுதியாக மாறினை
சிறுவரை மாவீராக்கி
ரிய நாடெழுப்பினை
சீறிப்பாயும் ராம பாண
மாக வந்தனை
(சிவாஜி)

ஹிந்துவின் உறக்கம் நீக்கி
மெய்யுணர் வளித்தனை
சொந்த அரசு நிறுவிக் காட்டி
நெஞ்சு விம்ம வைத்தனை
தர்ம சக்தி வென்று தீரும்
என்று ணர்த்தினை
(சிவாஜி)
ஒற்றையாக உறுதி பூண்டு
காவிக் கொடியுயர்த்தினை
வெற்றிவேலைப் போலத் தாக்கி
இடர்மலை தகர்த்தனை
வெற்றி வாகை சூடி வீர வாழ்வு தந்தனை
(சிவாஜி)

மலை வளையும், தலை குனியும், நதி நிற்கும் தடை கண்டே

21.
மலை வளையும், தலை குனியும்,
நதி நிற்கும் தடை கண்டே
எனின் இளம் ஒடுங்காது
அபாய்தில் நடுங்காது
குரு கோவிந்தன இரு புதல்வர்
சின்னஞ்சிறுவர் இளந்தளிர்கள்
எனின் சிங்கத்தின் குட்டியினர்
தர்மத்தின் தீரக்காவலர்கள்
அடல் ஏறாகச் சீறிட்டார்
கார்கித்தார் கால பைரவன் போல்
""ஒருக்காலும் தலை வணங்கோம்
எந்நாளும் கொள்கை விடமாட்டோம்
எம் தேசம் எங்கள் உயிராகும்
எம் தர்மம் எங்கள் உயிராகும்
குரு தமோசர் உயர் ஆவர்
ஸ்ரீ குருகிரந்தம் உயிராகும்''

ஜோராவர் வீறுடன் முழங்க
பத்தேசிம்மன் கர்ஜனை செய்தான்
""சுவர் தனையே எடுப்பிடுக
கல்லாலே மூடி அடைத்திடுக
எம் மூச்செல்லாம் உணர்ச்சி தரும்
எங்கள் பிணமும் எழுச்சி தரும்
இந்த சுவர்கள் முழக்கமிடும்
என்றென்றும் வீர கோஷமிடும்
எங்கள் தாய் நாடு வென்றிடுக
எம்மாருயிர் தர்மம் வென்றிடுக
குருதசமேசர் வென்றிடுக
ஸ்ரீ குருகிரந்தம் வென்றிடுக

பாரில் எல்லா தேசங்களில், எங்கள் தேசம் உயர்தேசம்

20.
பாரில் எல்லா தேசங்களில்
எங்கள் தேசம் உயர்தேசம்

இதனில் நாங்கள் பிறந்துள்ளோம்
இதுனுணவுண்டு வளர்ந்துள்ளோம்
உயரிரை காட்டிலும் உயர்ந்துள்ளது
(எங்கள்)

தனவந்தர்கள் பலர் ஆகியுள்ளர்
வீரர்கள் வந்து உதித்துள்ளார்
வீரமும் தீரமும் கொண்டுள்ளது
(எங்கள்)

வீரராமரே அவதரித்தார்
தரிசனம் தந்தார் நம் கிருஷ்ணர்
அவதாரர்களின் ஜன்ம இடம்
(எங்கள்)

சாத சுகத்தை உவந்தளிக்கும்
துக்கமே இன்றி துரத்திவிடும்
தேசத்திற்காக உயிர்விடுவோம்
(எங்கள்)

வானளவும் நம் கொடியின் கீழ்
நம் பெரும் தலைவர் ஆணையிடின்
யாவும் அர்ப்பணம் செய்திடும்வோம்
(எங்கள்)

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, கிராம மனைத்தும் தவ பூமி

19
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி
கிராம மனைத்தும் தவ பூமி
சிறுமியர் ரெல்லாம் தேவியின் வடிவம்
சிறுவ ரனைவரும் ராமனே
சிறுவ ரனைவரும் ராமனே

கோயிலைப் போலே உடல்கள் புனிதம்
மாந்தரனைவரும் உபகாரி
சிங்கத்துடனே விளையாடிடுவோம்
ஆவினம் எங்கள் அன்புத்தாய்
காலையில் ஆலய மணிகள் முழங்கும்
கிளிகள் கண்ணன் பெயர் பாடும்
(சிறுமியர்ரெல்லாம்)

உழைப்பால் விதியை மாற்றிடும் மண்ணிது
உழைப்பின் நோக்கம் பொது நலமே
தியாகமும் தவமும் கவிகள் பாட்டின்
கருவாய் அமையும் நாடிது
கங்கை போலே தூய ஞானம்
ஜீவ நதியெனப் பாய்ந்திடும்
(சிறுமியர்ரெல்லாம்)

போர்க்களந் தன்னிலே எங்கள் வீரர்
புனித கீதையை ஓதுவர்
ஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள்
எங்கள் அன்னை சீதையே
வாழ்வின் முடிவாய் விளங்குவதிங்கு
இறைவன் திருவடி நீழலே
(சிறுமியர்ரெல்லாம்)

ஒண்ணுதான் ஒண்ணுதானே நம்ம நாடு தம்பி

18.
ஒண்ணுதான் ஒண்ணுதானே நம்ம நாடு தம்பி
ஒண்ணுதான் ஒண்ணதானே
ஒண்ணுதானே நம்மநாடு எண்ணிப்பாரு நல்லா தம்பி
(ஒண்ணுதான்)
கங்கக் கர ராமனுக்கு ராமேசர மண்ணு தெய்வம்
செங்குட்டுவ சேரனுக்கோ இமயமலை கல்லு தெய்வம்
ரமேசர மண்ணு தெய்வம் இமயமலக் கல்லு தெய்வம்
(ஒண்ணுதான்)
பாண்டிநாட்டு ஆண்டாளுக்கு கண்ணனேதான்
எண்ணமெல்லாம்
ராஜபுத்ர மீரவுக்கும் கண்ணனேதான் எண்ணமெல்லாம்
ஆண்டாலுக்கும் மீரவுக்கும் கண்ணனேதான்
எண்ணமெல்லாம்
(ஒண்ணுதான்)
செந்தமிழின் முதலெழுத்தா வள்ளுவரு சொன்ன "அ'னா
எந்த மொழிக்காரருக்கும் முதலெழுத்தா ஆனதனால்
செந்தமிழின் முதலெழுத்தும் எந்தமொழி முதலெழுத்தும்
(ஒண்ணுதான்)
அங்கக்கிங்க பேதமில்ல, ஊரு மொத்தம் ஒரேசனம்
நல்லாச் சொல்லு நாலுதரம், நாடு மொத்தம் ஒரே இனம்
ஊரு மொத்தம் ஒரே சனம், நாடு மொத்தம் ஒரே இனம்
(ஒண்ணுதான்)

வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்து தர்ம சாதனை

17.
வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்து தர்ம சாதனை
வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்து தர்ம சாதனை
பலமலர்கள் பூத்தபோதும் நந்தவனம் ஒன்று தான்
பலமலர்கள் கோர்த்திணைந்து மாலையாவ தொன்றுதான்
மாலையாக நம்மையாக்கும் ஜீவசக்தி ஹிந்துõன்
ஜீவ சக்தி ஹிந்துதான், ஜீவ சக்தி ஹிந்து தான்
(வேற்றுமையில்)
பலவழிகள் பலபாதை போகுமிடம் ஒன்றுதான்
பலநதிகள் பாய்ந்து ஓடி கூடுமிடம் ஒன்றுதான்
பல உருவம் பல பெயர்கள் தெய்வசக்தி ஒன்றுதான்
தெய்வசக்தி ஒன்றுதான், தெய்வசக்தி ஒன்றுதான்
(வேற்றுமையில்)
பாரதத்துப் பலமொழிகள் சிந்தனையோ ஒன்றுதான்
பாரதத்து மாநிலங்கள் உடலிலங்க மாகிடும்
பாரதத்தின் ஒருமைகாக்கும் ஆன்மசக்தி ஹிந்துதான்
ஆன்மசக்தி ஹிந்துதான், ஆன்மசக்தி ஹிந்துதான்
(வேற்றுமையில்)
வேற்றுமையில் ஒற்றுமையைப் பெருமையாகக்
கொள்ளுவோம்
வேற்றுமையால் நஞ்சையூட்டும் வஞ்சகத்தை
வெல்லுவோம்
ராஷ்ட்ரதேவன் வெல்கவென்று ஒன்றுகூடிப்பாடுவோம்
ஒன்றுகூடிப்பாடுவோம், ஒன்றுகூடிப் பாடுவோம்
(வேற்றுமையில்)

ஹிந்துவாய் வாழ்வோம் காப்போம் ஹிந்துஸ்தான மிதை

16.
ஹிந்துவாய் வாழ்வோம் காப்போம்
ஹிந்துஸ்தான மிதை
வாழ்வின் ஒவ்வொரு செயலிலும்
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும்
ஹிந்துவாய் வாழ்வோம் காப்போம்
ஹிந்துஸ்தான மிதை (ஹிந்துவாய்)
உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும்
வீட்டினை அமைப்பதிலும் நம்முடைய
வீட்டினை அமைப்பதிலம்
ஹிந்துப் பண்பினை காத்து
அன்னிய மோகம் வெறுத்து (ஹிந்துவாய்)

ஜாதிகள் பேசி தாழ்நதது போதும்
பேதத்தை விட்டிடுவோம் நாமினி
ஒன்றாய் வாழ்ந்திடவோம்
ஹிந்து என்பதில் பெருமிதம்
ஹிந்து என்றே அறிமுகம் (ஹிந்துவாய்)

பிறவியில் உயர்வு தாழ்வுகள் சொல்வது
பேதமை என்றிடுவோம் தீண்டாமை
பாவம் என்றிடவோம்
ஹிந்து அனைவரும் ஓரினம்
உணர்ந்தால் உயரும் நம் இனம் (ஹிந்துவாய்)

சுதந்திர வாழ்வும் ஜனநாயகமும்
சமதர்மக் கொள்கைகளும் சோஷலிச
சமதர்மக் கொள்கைகளும்
ஹிந்து வாழ்ந்தால் வாழும்
ஹிந்து அழிந்தால் அழியும் (ஹிந்துவாய்)

சிறுநரி ஓலம் கேட்ட சிங்கம்
தயங்கி விடலாமோ? தளர்ந்து
ஒதுங்கி விடலாமோ?
"என்னுடைய தர்மம் உயர்ந்தது' என்றே
உரக்க முழங்கிடுவோம் "நான் ஒரு
ஹிந்து' என்றிடுவோம் (ஹிந்துவாய்)

ஹிந்து இன்றே ஒன்றுபடு

ஹிந்து இன்றே ஒன்றுபடு
ஹிந்து இன்றே ஒன்றுபடு
ஹிந்து இன்றே ஒன்றுபடு

பரம்பெருள் ஒன்றே பலவல்ல
சக்தியும் ஒன்றே இரண்டல்ல
ஹரியும் ஹரனும் புத்தனும்
ஒன்றின் பலப்பல வடிவங்கள்
சிந்தாந்தங்கள் ஏராளம்
சித்தர்களும் எண்ணற்றோர்
எனினும் அனைத்தை ஒன்றாய் இணைந்த
பாவன கங்கை ஒன்றேதான் (ஹிந்து)
ஏழை எளியோர் நலிந்தோரை
ஏற்றமளித்தே உயர்ந்திடுவோம்
அனைவருள்ளும் உறங்கி வாழும்
அமர சக்தியை எழுப்பிடுவோம்
மேலோர் கீழோர் இங்கில்லை
அனைவரும் அன்னையின் ஆருயிர் மைந்தர்
உடன் பிறந்தோர் உறவினரே (ஹிந்து)
வழிப்பறி செய்த ஓர்வேடன்
வானவர் நிலைக்கு உயர்ந்தவன்
படகோட்டியினை தழவிய ஒருவன்
சோதர பாசம் உணர்த்தியவன்
மீனவப் பெண்ணின் மகன் வந்தான்
வேதங்களையே வகுத்தளித்தான்
பிறவியிலே உயர்வு தாழ்வுகளில்லை
என்றே உணர்த்திய நாடு இது. (ஹிந்து)

கம்பன் பாடிய ராமகதை
வில்லின் அற்புத பாரதமும்
வீடுகள் தோறும் எதிரொலி செய்யும்
ஈடிணையில்லாத நாடு இது
நாயன்மாரும் ஆழ்வாரும்
வடலுõர் வள்ளல் பெருமானும்
ஆன்மநேயமாம் ஒருமையுணர்வால்
அமுதம் பாய்ச்சிய நாடு இது (ஹிந்து)

பாரத நாட்டைப் பாரிலுயர்த்திட ஒன்றுபடு ஒன்றுபடு

14.
பாரத நாøட்டைப் பாரிலுயர்த்திட
ஒன்றுபடு ஒன்றுபடு
ஹிந்து தர்மமிது ஓங்கி உயர்ந்திட
ஒன்றுபடு ஒன்றுபடு

ஆயிரமாண்டுகள் அன்னியன் ஆட்சியில்
அடிமைபட்டதை எண்ணிவிடு
வேற்றுமை ஒன்றே காரணமென்று
சற்றும் சரித்திரம் கண்டுவிடு (பாரத)

ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு
ஆயினும் ஒரன்னை மக்களன்றோ?
பேதங்கள் வந்தாலும் பேசி முடிப்போம்
போரிடும் தன்மையை விட்டுவிடு (பாரத)

நந்தனை தந்தவர் நம்மை பிரிவது
எந்த வகையிலும் தீமையன்றோ?
சிந்தனை செய்தவர் வீடு திரும்பிட
சந்ததம் நல்வழி கண்டிடுவோம் (பாரத)

பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்


13.
பாரதத் தாயைப் பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே
துõய மலர்கள் நாம்
பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால்
பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் இன்பத் தமிழும்
எங்கள தென்றிடுவோம்
கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு
ஹிந்தியும் எங்களதே (பாரதத்)

குமரி முனையிலே தவம்செய் சக்தி
இமயம் உறை ஈசன்
ராமேஸ்வரமும் காசியும் அதனை
வழிபடு பக்தர்களும்
நர்மதை கங்கை காவிரி நதியும்
ஒருமை உணர்த்திடுது (பாரதத்)

ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு
ஆனால் நாம் ஒன்று
மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று
வழிபடு தெய்வம் பலவானாலும்
அனைவருமே ஹிந்து (பாரதத்)

தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே
நாட்டின் உடமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு?
செய்தொழிலினிலே வேறுபட்டாலும்
யாதுமவள் தொழிலாம் (பாரதத்)

உலகின் குருவாய் பாரதம் ஆகிட

12.
உலகின் குருவாய் பாரதம் ஆகிட
உன்னத சக்தி வளர்ப்போம் நாம்
லட்சிய நாடாய் பாரதம் ஆகிட
தீவிர பக்தி வளர்ப்போம் நாம்

வலிவு படைத்திடு வீரம் கொண்டிடு
என்றெம் முந்தையர் முழங்குகிறார்
கலியுகத்தினிலே சங்கமே சக்தி
என்று மறைகள் கூறிடுது
வழுவா தேகும் வீரர் நாம் (உலகின்)
நாட்டினுக் கெனவே இறைவன் படைத்தான்
வேறொரு இன்பம் விரும்போமே
இடர்கள் எம்மை இரும்பென ஆக்கும்
இன்முகத்துடனே ஏற்றிடுவோம்
வெந்தே போயினும் நொந்தே மாயினும்
வந்தே மாதரம் என்றிடுவோம் (உலகின்)
தியாகம் எங்கள் கவசம் ஆகும்
சீலம் எங்கள் ஆயுதமே
வெற்றி கண்டிடப் பிறந்தோம் உலகின்
தோல்வி கண்டே தளரோமே
தீமை சூழ்ந்திடும் உலகில் நாங்கள்
தர்மக் கொடியினை உயர்த்திடுவோம் (உலகின்)

Sunday, December 19, 2010

இன்னமுதமாம் ராஷ்ட்ரபக்தி

இன்னமுதமாம் ராஷ்ட்ரபக்தி
நாடு முழுவதும் பரவும் போதும்
இடர்கள் யாவும் நடுங்கி ஓடும்
நாடு வென்றே வாகை சூடும்

காரிருள் தன்னை கண்டு அஞ்சி
கதிரவனுமே ஒளிவதுண்டோ?
காடு மலைகள் அணைகள் யாவும்
பெருகும் நதியை தடுப்பதுண்டோ?
சாடும் இன்னல் மலை கடந்து
ஏற்ற வழியில் ஏகுவானே
தேடிவந்தே புகழும் சூழும்
பகைவரெல்லாம் புழுதி ஆவர்
குறியை அடைய முனையும் போது
முள்ளும் கல்லும் மலர்களாகும்
(இடர்கள்)
கதிரவன் வழி தோன்றலானால்
கதிகலங்கி விலகுவோமோ
நதியினின்றும் ஊக்கம் கொண்டால்
தயங்கி வழியில் விலகுவோமோ
நல்வழியில் நிலைத்து நிற்கும்
எம்மை பிறழவைப்பவர் யார்?
சீறும் எரிமலை தணையனைக்கும்
திறமை படைத்தவர் எவருமுண்டோ?
சாவு வரினும் மன மகிழ்ந்தே
ஏகி விட்டோம் வாளை ஏந்தி
(இடர்கள்)
புதுமை அறிவுத் துறைகளில் நாம்
நிகரிலா முன்னேற்றம் காண்போம்
பரந்த வானின் புதிர்களெல்லாம்
புதிய வழியில் புரிய வைப்போம்
பிடித்து அலைக்கும் போகப் பேயை
விரட்டி தியாக உணர்வளிப்போம்
அடிமை வாழ்வாம் இழிவு நீக்கி
இன்ப மழையைப் பொழிய வைப்போம்
கனவு இதனை நனவு ஆக்க
திரண்டு எழுவோம் ஹிந்து மைந்தர் (இடர்கள்)