29.
சும்மாவா வந்தது?
சுதந்திரம் என்பது
சும்மாவா வந்தது?
எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்
எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்
தூக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை
தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை
(சும்மாவா)
ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சிவார் பெரியோர்
மாசுபேசி மயக்கிடவே முனைந்து நிற்கும் சுற்றம்
இருந்தபோதும் லக்ஷியத்தில் வீறுநடைபோட்டு
இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)
போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும்
பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும்
அன்னையார்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க
தன்னைத்தானே அழித்துக் கொண்டோர் எத்தனையோ எத்தனை
(சும்மாவா)
Super pa fantastic
ReplyDeleteI love this speech
Sema
ReplyDelete