30.
புதிய பாரதம் தலையெடுக்க
புதிய தலைமை மலர வேண்டும்
பாரத தேவி கலங்குகின்றாள்
பாரத மைந்தர் வீழ்ச்சி கண்டு
நறுமலர்ச்சி காண வேண்டின்
நல்லவர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
நேர்மையாளர் வீர நெஞ்சர்
நம்ம இயலும் நாணயத்தோர்
தொண்டு செய்ய விரதம் பூண்டோர்
தூயவர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
தன்னலத்தைத் தள்ளி வைத்தே
தாயகத்தின் நலன் விழைவோர்
பதவி மோகம் சிறுதுமற்ற
பண்பினர் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
அரசபோகம் சூழந்தபோதும்
அறத்தின் நெறியை மறந்திடாதோர்
புகழுரைக்க மயங்கிடதோர்
புனிதர்கள் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
வேஷம், பொய்மை, தந்திரத்தால்
கோஷத்தால் திசை திருப்பிடாதோர்
விலைக்கு வாங்கிட இடங்கொடாதோர்
வீரர்கள் அணிதிரள வேண்டும்
(புதிய தலைமை)
உள்ளும் புறமும் உயர்ந்து நிற்போர்
உள்ளத்திண்மையில் மேரு போன்றோர்
திறமை வளரத் தவமியற்றும்
தகைமையாளர் திரள வேண்டும்
(புதிய தலைமை)